Posts

அன்பு உள்ளங்களுக்கு , வணக்கம் . எனை எழுத வைத்த இறைக்கும் எண்ணம் கொடுத்த காலத்திற்கும் தமிழ் விதைத்த தகை சால்களுக்கும் என் தனித்தமிழ் நன்றியே காணிக்கை. இவ்வலைப்பூ மேனிகளில் என் எண்ணங்களை பதிவுசெய்கிறேன் . அவ்வண்ணமே உங்கள் எண்ணம் கூற வேண்டுகிறேன் . நன்றி ! இர . நாகராசன் 07/04/2018.                                             இறையிற்கோர் அஞ்சல்  இறைவா ! நிகழும் யாவைக்கும் பதியே! நீதி வேந்தே ! சற்றே -என் வேண்டுதல் கேட்க வேண்டுகிறேன் அனைவருக்கும் பொதுவாம் -இப் பிரபஞ்சத்தில் அரசனோடு ஆண்டியையும் படைத்த தென்ன ? மனிதனோடு அறியாமையையும் சேர்த்ததென்ன ஏனென்று விளம்பினால் -நின் பக்தர் பதிற்சொல்வர் பின்னே போல் . செவிமடு அறிவிலியே ! அளவற்ற -ஜீவ ராசிகளின் உரிமையாம் இவ்வண்டத்தில் மேடுண்டாம் -கீழ் பள்ளமுண்டாம் ஒளி பகலுண்டாம் குளிர் இரவுண்டாம் ஜனனமுண்டாம் ஜீவன் போதலுமுண்டாம் ஆகையினால் மனிதா உன் வினாவும் பதில் பெறும் இதனை போல் ...