அன்பு உள்ளங்களுக்கு , வணக்கம் .
எனை எழுத வைத்த இறைக்கும்
எண்ணம் கொடுத்த காலத்திற்கும்
தமிழ் விதைத்த தகை சால்களுக்கும்
என் தனித்தமிழ் நன்றியே காணிக்கை.
இவ்வலைப்பூ மேனிகளில்
என் எண்ணங்களை
பதிவுசெய்கிறேன் .
அவ்வண்ணமே உங்கள்
எண்ணம் கூற
வேண்டுகிறேன் .
நன்றி !
இர . நாகராசன்
07/04/2018.
இறையிற்கோர் அஞ்சல்
இறைவா !
நிகழும் யாவைக்கும்
பதியே!
நீதி வேந்தே !
சற்றே -என்
வேண்டுதல் கேட்க
வேண்டுகிறேன்
அனைவருக்கும்
பொதுவாம் -இப்
பிரபஞ்சத்தில்
அரசனோடு
ஆண்டியையும்
படைத்த தென்ன ?
மனிதனோடு
அறியாமையையும்
சேர்த்ததென்ன
ஏனென்று
விளம்பினால் -நின்
பக்தர்
பதிற்சொல்வர்
பின்னே போல் .
செவிமடு அறிவிலியே !
அளவற்ற -ஜீவ
ராசிகளின் உரிமையாம்
இவ்வண்டத்தில்
மேடுண்டாம் -கீழ்
பள்ளமுண்டாம்
ஒளி பகலுண்டாம்
குளிர் இரவுண்டாம்
ஜனனமுண்டாம்
ஜீவன்
போதலுமுண்டாம்
ஆகையினால்
மனிதா
உன் வினாவும்
பதில் பெறும்
இதனை போல் .
இறைவா
இத்தனைக்கும்
அறிவு
ஐந்துண்டாம்
எமக்கு நீர்
அளித்தது
ஆறன்றோ !
அவைபோல்
எம்மை ஆக்கியிருந்தால்
இம்மையை
நினையாதிருப்போம்
இங்கே
விலங்கோடு
விலங்காக
மனிதனைக்
காண்கிறோம் .
காகத்தோடு
சோறு பொறுக்கும்
சோகத்தைக்
காண்கிறோம் .
தேரடி வீதியடிகளில்
நின்
குறை கவனப்
படைப்பினைப்
பார்க்கிறோம் ,
இனியும்
இறைவா
மனிதனுக்கு
ஓரறிவு
குறைத்துவிடு
இல்லையேல்
மனிதனை
மனிதனாக
வாழ வைத்து
விடு .
######################################################################
எனை எழுத வைத்த இறைக்கும்
எண்ணம் கொடுத்த காலத்திற்கும்
தமிழ் விதைத்த தகை சால்களுக்கும்
என் தனித்தமிழ் நன்றியே காணிக்கை.
இவ்வலைப்பூ மேனிகளில்
என் எண்ணங்களை
பதிவுசெய்கிறேன் .
அவ்வண்ணமே உங்கள்
எண்ணம் கூற
வேண்டுகிறேன் .
நன்றி !
இர . நாகராசன்
07/04/2018.
இறையிற்கோர் அஞ்சல்
இறைவா !
நிகழும் யாவைக்கும்
பதியே!
நீதி வேந்தே !
சற்றே -என்
வேண்டுதல் கேட்க
வேண்டுகிறேன்
அனைவருக்கும்
பொதுவாம் -இப்
பிரபஞ்சத்தில்
அரசனோடு
ஆண்டியையும்
படைத்த தென்ன ?
மனிதனோடு
அறியாமையையும்
சேர்த்ததென்ன
ஏனென்று
விளம்பினால் -நின்
பக்தர்
பதிற்சொல்வர்
பின்னே போல் .
செவிமடு அறிவிலியே !
அளவற்ற -ஜீவ
ராசிகளின் உரிமையாம்
இவ்வண்டத்தில்
மேடுண்டாம் -கீழ்
பள்ளமுண்டாம்
ஒளி பகலுண்டாம்
குளிர் இரவுண்டாம்
ஜனனமுண்டாம்
ஜீவன்
போதலுமுண்டாம்
ஆகையினால்
மனிதா
உன் வினாவும்
பதில் பெறும்
இதனை போல் .
இறைவா
இத்தனைக்கும்
அறிவு
ஐந்துண்டாம்
எமக்கு நீர்
அளித்தது
ஆறன்றோ !
அவைபோல்
எம்மை ஆக்கியிருந்தால்
இம்மையை
நினையாதிருப்போம்
இங்கே
விலங்கோடு
விலங்காக
மனிதனைக்
காண்கிறோம் .
காகத்தோடு
சோறு பொறுக்கும்
சோகத்தைக்
காண்கிறோம் .
தேரடி வீதியடிகளில்
நின்
குறை கவனப்
படைப்பினைப்
பார்க்கிறோம் ,
இனியும்
இறைவா
மனிதனுக்கு
ஓரறிவு
குறைத்துவிடு
இல்லையேல்
மனிதனை
மனிதனாக
வாழ வைத்து
விடு .
######################################################################
Comments
Post a Comment